மெல்போர்ன் மைதான HONOURS BOARD-ல் பொறிக்கப்பட்ட நிதிஷ் குமார் பெயர்! - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் ஆடுகிறது.  

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  

போட்டியின் நான்காவது நாளில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் அவர்கள் மொத்தம் 333 ரன்கள் முன்னிலையில் உள்ளது. கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளதால், போட்டி டிரா முடிவை நோக்கி நகர்கிறது.  

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணியின் நிதிஷ் குமார் 8வது விக்கெட்டுக்காக களமிறங்கி சதம் அடித்து அசத்தினார். இதனால் மெல்போர்ன் மைதானத்தின் HONOURS BOARD-ல் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.  

சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த வெளிநாட்டு வீரர்களை கௌரவிக்கும் வகையில், மெல்போர்ன் மைதானத்தின் HONOURS BOARD-ல் பெயர்கள் இடம்பெறுவது பாரம்பரியமாகும்.  

மேலும், நிதிஷ் குமார் சதம் அடித்ததற்காக ரூ.25 லட்சம் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HONOURS BOARD Nitish kumar reddy ind vs aus


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->