உலகக் கோப்பையை வெல்லப்போகும் கிரிக்கெட் அணிக்கு பரிசு தொகை எவ்வளவு?
How much is the prize money for the cricket team that will win the world cup
பரிசுத்தொகை விவரங்களை அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் வாரியம்!
இந்த வருடம் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரிசு விவரங்களை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த 16 அணிகளில் ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் சூப்பர் 12க்கு நேரடியாக தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள நான்கு அணிகளை தேர்வு செய்ய முதல் சுற்று போட்டிகள் நடைபெறும்.
முதல் சுற்று போட்டியில் எட்டு அணிகள் விளையாட உள்ளன. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட எட்டு அணிகளில் ஏ-பிரிவில் நமீபியா, இலங்கை, நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பி-பிரிவில் மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே என பிரிக்கப்பட்டு முதல் சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன.
உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகளுக்கான பரிசுத்தொகையானது பின்வருமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பீட்டில்:
இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு ரூ.13,05,35,440
தோல்வி அடையும் அணிக்கு- ரூ.6,52,64,280
அரையிறுதியில் தோல்வி அடையும் அணிக்கு- ரூ.3,26,20,220
சூப்பர் 12ல் வெற்றி பெற்ற அணிக்கு- ரூ.32,62,022
சூப்பர் 12ல் தோல்வி அடையும் அணிக்கு- ரூ.57,08,013
முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணிக்கு- ரூ.32,62,022
முதல் சுற்றில் வெளியேறும்- ரூ.32,62,022 என பரிசு தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
English Summary
How much is the prize money for the cricket team that will win the world cup