இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் விளையாட தடை.!! ஐசிசி அதிரடி.!!
ICC banned Harmanpreet Kaur playing next 2 matches
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட வங்கதேசம் சென்றது. அதில் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றுவது யார் என்பதை உறுதி செய்யும் 3வது ஒருநாள் போட்டி மிர்பூரில் நடைபெற்றது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி, 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியில் ஷபாலி வர்மா மற்றும் ஹர்லீன் தியோல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக ஆடினாலும் 49.3 ஓவர்களில் 225 ரன்களுக்கு இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. போட்டிக்கான நேரம் முடிந்துவிட்டதால் சூப்பர் ஓவர் முறை பின்பற்ற முடியாது என நடுவர்கள் அறிவித்தனர். இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
இந்த போட்டியின் போது ஆட்டமிழந்த ஹர்மன்பிரீத் கவுர் செய்த செயல் சர்ச்சைய கிளப்பியது. இந்த போட்டியின் 34வது ஓவரின் 4வது பந்தில் ஹர்மன்பிரீத் கவுர் ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றபோது பந்து பேட்டில் படாமல் காற்றில் பறந்த நிலையில் அதனை வங்கதேசத்தின் நஹிதா அக்தர் பிடித்து விக்கெட் கோரினார். நடுவரும் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார்.
பந்து கையிலோ, பேட்டிலோ படாத நிலையில் அவுட் கொடுத்ததற்கு ஆவேசமடைந்த ஹர்மன் பிரீத் தனது பேட்டால் ஸ்டம்பை அடித்தார். மேலும் பெவிலியனுக்கு செல்லும்போது நடுவரையும் வசை பாடினார். தனது விக்கெட்டை கொண்டாடிய வங்கதேச ரசிகர்களை நோக்கி, கையை தூக்கி தம்ஸ்-அப் சிம்பல் காட்டினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
போட்டியின் முடிவில் பேசிய ஹர்மன் பிரீத் "இந்த போட்டியில் நடுவர்கள் அளித்த சில முடிவுகள் எங்களுக்கு ஆச்சரியம் அளித்தது. அடுத்த முறை நாங்கள் வங்காளதேசத்துக்கு வரும் போது நடுவர்களின் முடிவையும் சமாளிக்கும் வகையில் தயாராவோம். நடுவர்களின் சில மோசமான முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் ஐசிசி விதிகளை மீறி செயல்பட்டதால் அவருக்கு போட்டியின் சம்பளத்தில் 75% அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் சில போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்மன்பிரீத் அடுத்த 2 சர்வதேச போட்டிகளில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது.
English Summary
ICC banned Harmanpreet Kaur playing next 2 matches