ஐ.சி.சி. சிறந்த ஒருநாள் வீரர் விருது 2024; பரிந்துரை பட்டியலில் இடம்பெற்ற இந்திய இலங்கை வீரர்கள் ? - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வரிசையில் இந்த வருடமும் விருது வழங்கும் வகையில் பரிந்துரை பட்டியலை வெளியிட்டு வருகிறது.

2024 நடப்பாண்டிற்கான 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்' விருதுக்கு தகுதியான வீரரை தேர்வு செய்ய 04 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்து வெளியிட்டுள்ளது.

அதில் இலங்கை வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் குசல் மென்டிஸ், ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் வெஸ்ட் இண்டீசின் ஷெர்பான் ரூதர்போர்டு ஆகிய 04 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அத்துடன் மகளிர் பிரிவில் 'சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை' விருதுக்கு தகுதியான வீராங்கனையை  தேர்வு செய்ய 04 வீராங்கனைகள் பட்டியலையும் வெளியிட்டு உள்ளது.

அதில் இலங்கையை சேர்ந்த  சமரி அத்தப்பத்து , இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா,  அவுஸ்திரேலியாவை சேர்ந்த அன்னாபெல் சதர்லேண்ட், மற்றும் லாரா வோல்வார்ட் தென்னாப்பிரிக்கா ஆகிய வீராங்கனைகளை பரிந்துரைத்துள்ளது. 

 மேலும் 2024 ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்ரேயங்கா பட்டேல் பரிந்துரைப்பட்டுள்ளார். அத்துடன் 2024 ஆம் ஆண்டின் ஆண்களுக்கான T20I வீரர்கள் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC Best One Day International Player Award 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->