மீண்டும் முதலிடம் பிடித்த பாபர் அசாம்!  - Seithipunal
Seithipunal


கிரிக்கெட் வீரர்களின் ஒருநாள் மற்றும் டி20 தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

ஒருநாள் தரவரிசை :

ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடம் வகித்த இந்திய வீரர் சுப்மன் கில்லை பின்னுக்கு தள்ளி, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். இரண்டாம் இடத்தில் சுப்மன் கில், மூன்றாம் இடத்தில் விராட் கோலி, நான்காம் இடத்தில் ரோகித் சர்மா, ஐந்தாம் இடத்தி டேவிட் வார்னர் உள்ளார்.

ஒருநாள் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் 2ம் இடத்திலும், இந்திய வீரர் முகமது சிராஜ் 3ம் இடத்திலும், பும்ரா 5 ஆம் இடத்திலும் உள்ளனர். 

ஒருநாள் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் முதல் இடத்திலும், ஆப்கான் வீரர் முகமது நபி இரண்டாம் இடத்திலும், ஜிம்பாபே வீரர் சிக்கந்தர் ராசா 3 வது இடத்திலும் உள்ளனர்.

டி20 தரவரிசை :

டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவும், 2ம் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானும், 3ம் இடத்தில் தென்னாபிரிக்க வீரர் எய்டன் மார்க்ரமும் உள்ளனர். 

டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்த ஆப்கான் வீரர் ரஷித் கானை பின்னுக்கு தள்ளி, இங்கிலாந்தின் அடில் ரஷித் முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளார். 

ரஷித் கான் 2வது இடத்திலும், இந்திய வீரர் ரவி பிஷ்னோய் 3ஆம் இடத்திலும், இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா 4ஆம் இடத்திலும், மகேஷ் தீக்சனா 5ஆம் இடத்திலும் உள்ளனர்.

டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன், ஆப்கான் வீரர் முகமது நபி, தென்னாபிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.

டெஸ்ட் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்திலும், ஆல்ரவுடர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதல் இடத்திலும் உள்ளனர்.

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் முதலிடத்தில் உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC RANKING DEC 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->