147 வருட வரலாற்று சாதனை செய்த இந்திய புயல் பும்ரா; இந்திய பௌலரின் இமாலய சாதனை..! - Seithipunal
Seithipunal


147 வருட வரலாறு.. ஐசிசி தரவரிசையில் எந்த இந்தியரும் செய்யாத சாதனை.. 907 புள்ளிகளை பெற்ற பும்ரா!

ஐசிசி தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 907 புள்ளிகளை பெற்று நம்பர் 01 இடத்தை பிடித்து  புதிய வரலாற்று சாதனைபடைத்துள்ளார்.

 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை எந்த இந்திய அணி பவுலரும் 907 புள்ளிகளை பெற்றது கிடையாது. முதல் முறையாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் சர்வதேச கிரிக்கெட்டை மிரள வைத்துள்ளார். 

பும்ரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 04 போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு ஐசிசி பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகளை பெற்று நம்பர் 01 இடத்தை பிடித்ததே சாதனையாக இருந்து வந்தது. இந்த சாதனையை  ஜஸ்பிரிட் பும்ரா சமன் செய்தார்.

இந்த நிலையில், மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரிட் பும்ரா 09 விக்கெட்டுகளை வீழ்த்தியதை, தொடர்ந்து ஐசிசி தரவரிசை பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் பும்ரா 907 ரேட்டிங் புள்ளிகளை பெற்று நம்பர் 01 இடத்தை பெற்றுள்ளார்.

இதன் மூலமாக 147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 907 புள்ளிகளை பெற்ற முதல் இந்திய பவுலர் என்ற புதிய வரலாற்றை ஜஸ்பிரிட் பும்ரா படைத்துள்ளார். 

சர்வதேச அளவில் 907 புள்ளிகளை எட்டிய 17வது பவுலர் என்ற டெரிக் அண்டர்வுட்டின் சாதனையை பும்ரா சமன் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் ஜடேஜா 10 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

பேட்ஸ்மேன்களை பொறுத்தவரை 895 ரேட்டிங் புள்ளிகளுடன் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 04வது இடத்தை பிடித்துள்ளார்.

ஐசிசி டாப் 10 தரவரிசையில்  இடம் பிடித்துள்ள ஒரே இந்திய பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஸ்டீவ் ஸ்மித் 03 இடங்கள் முன்னேறி 07வது இடத்தையும், ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி 12வது இடத்திலும் உள்ளார். 

விராட் கோலியை 03 இடங்கள் பின் தங்கி 24வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 05 இடங்கள் பின் தங்கி 40வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், மெல்போர்ன் டெஸ்டில் சதம் விளாசிய நிதிஷ் குமார் ரெட்டி 20 இடங்கள் முன்னேறி 53வது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC rankings Bumrah has scored 907 points


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->