டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்த இரு அணிகள் தான் - ஆருடம் பலிக்குமா? - Seithipunal
Seithipunal


நடக்க உள்ள டி20 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் பாகிஸ்தான் அணியும் தான் மோதும் என்று, ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் நாதன் லயன் ஆருடம் தெரிவித்துள்ளார்.

வருகின்ற ஒன்றாம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. 

இந்த டி20 உலக கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப் ஆட்டத்தில் களமிறங்கும் அணிகள் எது என்பது குறித்து கிரிக்கெட் வல்லுனர்களும், முன்னாள் நட்சத்திர வீரர்களும் தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனனர்.

குறிப்பாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்று பெரும்பாலான முன்னால் நட்சத்திர வீரர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும், பாகிஸ்தான் அணியும் தான் மோதும் என்று, ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் நாதன் லயன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்த டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் வெல்லப்போகும் ஒரு அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான் காரணம். ஆம் நீங்கள் நினைப்பது போல் நான் ஆஸ்திரேலியா அணியின் சார்பு உடையவன் தான்.

மற்றொரு அணிக்கு வாய்ப்பு இருக்கிறது அல்லது இறுதி போட்டியில் விளையாடும் அணி என்றால் அது பாகிஸ்தான் அணியாக தான் இருக்கும். 

இந்த தொடர் நடக்கும் இரு நாடுகளின் களநிலவரத்தை பொருத்தவரையில் சுழற் பந்து வீச்சுதான் எடுபடும். பாகிஸ்தான் அணிகள் தற்போது தரமான சுழற் பந்துவீச்சாளர்கள் உள்ளனர். மேலும் பாபர் அசாம் போன்ற அதிரடி ஆட்டக்காரர்களும் அந்த அணிகள் இருப்பது அந்த அணிக்கு வலுவை சேர்க்கும்.

அதே சமயத்தில் இந்த டி20 உலக்கை உலக கோப்பை தொடரில் மிச்சல் மார்ஷ் அதிக ரன்களை அடித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளையும் கைப்பற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று நாதன் லயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ICC T20 WC 2024 Final prediction


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->