#INDvsPAK | முதல் ஓவர் முடிந்ததுமே ஆட்டம் நிறுத்தம் - என்ன இப்படி ஆகிடுச்சே!
ICC T20 WC 2024 IND vs PAK
டி20 உலகக் கோப்பை தொடரின் 19-வது லீக் போட்டி இன்று நியூயார்க்கில் நடந்து கொண்டிருக்கிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன.
இந்த தொடரில் அமெரிக்காவிடம் பாகிஸ்தான் தோற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால், இந்தியாவிற்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதற்கிடையே நியூயார்க்கில் மழை பெய்து வருவதால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னர் மழை நின்றவுடன் டாஸ் சுண்டப்பட்டதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை.
முதல் ஓவரை ஷாஹின்ஷா அஃப்ரடி, முதல் பந்தில் இரண்டும் ரன்னும், மூன்றாவது பந்தில் சிக்சரும் அடித்தார் ரோஹித் ஷர்மா,
இந்நிலையில், இரண்டாவது ஓவர் வீசுவதற்குள் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 8 ரன்களை சேர்த்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்து கொள்ளும்.
English Summary
ICC T20 WC 2024 IND vs PAK