மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணி!
icc wc disabled 2025 India Champion
மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது.
இலங்கையில் ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்தது. யோகேந்திர பதோரியா அணியின் முக்கிய ஆட்டக்காரராக 40 பந்துகளில் 73 ரன்கள் விளாசினார். அவரது இன்னிங்சில் 4 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடங்கும்.
198 ரன்கள் இலக்காக களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது. இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
பந்து வீச்சில் ராதிகா பிரசாத் சிறந்து விளையாடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார், மேலும் கேப்டன் விக்ராந்த் கெனி 2 விக்கெட்டுகளுடன் சிறப்பாக செயல்பட்டார். இந்திய அணியின் இந்த வெற்றி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
English Summary
icc wc disabled 2025 India Champion