அரையிறுதியில் பாகிஸ்தான்? ஆப்கான், இலங்கை கையில் முடிவு! - Seithipunal
Seithipunal


உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்ற விவாதத்தை விட, பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லுமா? செல்லாதா? என்ற விவாதமே தற்போது பெரு விவாதம் ஆகி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தான அணி அரையிறுதிக்கு செல்வதற்கு உண்டான வாய்ப்புகள் என்னென்ன இருக்கிறது என்பது குறித்தும், மற்ற அணிகளின் நிலவரம் குறித்தும், இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காண்போம்.

புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள தென் ஆப்பிரிக்கா, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில், இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பதுசெய்து,16 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில தென் ஆப்பிரிக்கா 12 புள்ளிகளுடனும், மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடனும், நான்காம் இடத்தில நியூஸிலாந்து 8 புள்ளிகளுடனும் முதல் 4 இடங்களில் உள்ளன.

இதில், பாகிஸ்தான் 8 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அதிகம் காரணமாக ஆப்கனைக் காட்டிலும் ஒரு இடம் முன்னேறி 5-ம் இடத்தில் உள்ளது. ஆப்கான் 6 ஆம் இடத்தில உள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு போலவே நியூஸிலாந்து அணி தோல்வி அடைந்து, வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் ‘டார்க் ஹார்ஸ்’ ஆகி மீண்டும் கோப்பையை நோக்கி செல்கிறது என்கின்றனர் அந்நாட்டு ரசிகர்கள்.

ஆனால், அதற்க்கு பாகிஸ்தான் அரையிறுதிக்கு முதலில் தகுதி பெற வேண்டும். அப்படியே தகுதி பெற்றாலும் இந்தியாவுடன் அரையிறுதியில் மோதினால் தோல்விதான் என்கின்றனர் இந்திய ரசிகர்கள். உண்மையில் பாகிஸ்தான் அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும், அப்போதுதான் இந்திய அணி எளிதாக இறுதிசுற்றுக்கு எளிதாக செல்லும் என்பதே இந்திய ரசிகர்களின் எண்ணம்.

தற்போதைய நிலையில், மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி 10 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு தகுதிபெறும் நிலையில் உள்ளது.

இன்று ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தினால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு செல்வது உறுதியாகிவிடும். ஆனால், ஆப்கானிஸ்தான் அணியை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியுமா? என்ற கேள்வியும் பாகிஸ்தானின் அடிவயிற்றில் புளியை கரைக்கும்.

இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய நான்கு அணிகளை அடுத்தடுத்து வெற்றிகொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி மனதளவிலும், இந்திய ரசிகர்களில் முழு ஆதரவோடும், மிக வலிமையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும். வெற்றிபெற்றால் அரையிறுதி செல்லும் வாய்ப்பையும் ஆப்கானிஸ்தான் அணி தக்கவைத்து கொள்ளும். 

ஆஸ்திரேலியா அணி தோற்றாலும் அடுத்த ஆட்டம் வங்கதேசத்துக்கு எதிரானதுதான் எளிதாக வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துவிடும்.

எனவே, இந்த 4-ம் இடத்துக்கான போட்டிதான் கடுமையாகியுள்ளது. நியூஸிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு இடையே உள்ள இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்திலும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்திலும் வெற்றிபெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு சென்றுவிடும். 

ஆனால் இரண்டிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு வாய்ப்பு. அதுமட்டுமில்லை. வரும் நவம்பர் 9ம் தேதி இலங்கைக்கு எதிராக தங்கள் கடைசி லீக் போட்டியில் நியூஸிலாந்து ஆடுகிறது. இதில், நியூஸிலாந்து தோல்வியுற்று, பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்திவிட்டால் பாகிஸ்தான் 10 புள்ளிகளுக்கு சென்றுவிடும். 

ஒருவேளை ஆப்கானிஸ்தான் இரண்டில் ஏதேனும் ஒரு போட்டியில் வென்றுவிட்டால் பாகிஸ்தானுடன் 10 புள்ளிகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு செல்லும்.

மேலும், நியூஸிலாந்து அணி இலங்கையை வீழ்த்தி 10 புள்ளிகள் பெற்று, பாகிஸ்தான், இங்கிலாந்தை வீழ்த்தி விடும்பட்சத்தில், ஆப்கான் மீதமுள்ள 2 போட்டிகளிலும் தோல்வி என்றால் நியூஸிலாந்து, பாகிஸ்தான் இடையே நெட் ரன் ரேட் பிரச்சினை வரும். 

இவையெல்லாம் இல்லாமல் நியூஸிலாந்து - இலங்கை மேட்ச் மழையால் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா புள்ளிகள் பிரித்து வழங்கப்படும் பட்சத்தில், நியூஸிலாந்து 9 புள்ளிகளுடன் வெளியேறிவிடும். பாகிஸ்தான் இங்கிலாந்தை வீழ்த்தி 10 புள்ளிகளுடன் அரையிறுதியில் இந்தியாவை சந்திக்கும்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், 

பாகிஸ்தான் அணி அரையிறுதி முன்னேற முதலில் இங்கிலாந்தை வெற்றிகொள்ள வேண்டும்.
சவுத் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் ஆப்கான் தோல்வியடைய வேண்டும். 
நியூசிலாந்து அணியை இலங்கை வெல்ல வேண்டும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ICC World Cup 2023 AFG vs AUS Pak Semi Final Chance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->