இங்கிலாந்தை கதறவிட்ட ரச்சின் ரவீந்திரா? சச்சின் - ரச்சின்! ஒரு சுவாரசிய தொகுப்பு!
ICC World Cup 2023 New Zealand Rachin ravindra
உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக களமிறங்கிய தனது முதல் ஆட்டத்திலேயே சதம் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் 'ரச்சின் ரவீந்திரா'.
உலகக் கோப்பை தொடர் 2023 -ன் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. 2019 உலகோப்பையை பறித்த இங்கிலாந்துக்கு, பயங்கரமான ஒரு பதிலடியை நியூசிலாந்து அணி அந்த ஆட்டத்தில் கொடுத்துள்ளது.
இந்த 82 பந்துகளில் சதம் விளாசிய ரச்சின் ரவீந்திரா கிரிக்கெட் ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்துள்ளார். இவர் என்ன சச்சின் ரசிகரா? ஏன் ர'ச்சின் என பெயர் வைத்துள்ளார் என்று இந்திய ரசிகர்கள் தங்களின் தேடலை தொடங்கியுள்ளனர்.
சரி யார் இந்த ரச்சின் ரவீந்திரா?
ரச்சின் ரவீந்திராவின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி. ஆம் நீங்கள் நினைப்பது போல் அவர் இந்தியர் தான். பெங்களூருவில் மென்பொருள் துறை வல்லுநராக பணியாற்றிய ரவி கிருஷ்ணமூர்த்தி, தனது இளமைக் காலத்தில் பெங்களூருவில் ஏராளமான கிளப் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
மேலும், சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிடின் தீவிர ரசிகராகவும் இருந்துள்ளார். இதனாலேயே, தனது மகனுக்கு ராகுல் டிராவிட்டில் இருந்து ’ர’ வையும், சச்சின் டெண்டுல்கரின் பெயரிலிருந்து ’ச்சின்’ இரண்டையும் சேர்த்து ரச்சின் எனப் பெயரிட்டுள்ளார் ரவி கிருஷ்ணமூர்த்தி.
கடந்த 1999 -ல் வெல்லிங்டனில் பிறந்த ரச்சின் ரவீந்திராவுக்கு அவரின் தந்தை ரவி கிருஷ்ணமூர்த்தி தான் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
கடந்த 2016 மற்றும் 2018-ல் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில், நியூசிலாந்து அணியுடன் இணைந்த ரச்சின் ரவீந்திரா, நியூசிலாந்து அணியின் வளர்ந்து வரும் வீரராக ஐசிசி (2018) அறிவித்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், வங்கதேசத்துக்கு எதிராக டி20 போட்டியிலும் அறிமுகமானார்.
இந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரச்சின் ரவீந்திரா, உலகக் கோப்பைக்கான நியூசிலாந்து அணியிலும் இடம் பிடித்து, தனது அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். இது அவருடைய முதல் சதமாகும்.
English Summary
ICC World Cup 2023 New Zealand Rachin ravindra