ஒவ்வொரு பந்தும் 4,6னு போகுது..இம்பாக்ட் பிளேயர் விதியை விமர்சித்த விராட் கோலி!! - Seithipunal
Seithipunal


17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஆகிய மூன்று அணிகளும் அடுத்த சுற்று பிளேஆப்க்குள் நுழைந்துள்ளது.

நான்காவது அணியாக யார் பிளேஆப் செல்வார்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்,சென்னை அணியும் பெங்களூரு அணியும் இன்று மோதுகிறது. மழையால் போட்டி நின்றால் சென்னை அணி பிளேஆப்க்கு முன்னேறும். வெற்றி பெற்றாலும் பிளேஆப்க்கு செல்லும். பெங்களூர் அணி சென்னை அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப்க்கு செல்ல வாய்ப்புள்ளது.

இந்தநிலையில், பெங்களூர் அணி நட்சத்திர வீரர் விராட் கோலி இம்பாக்ட் பிளேயர் முறையை விமர்சித்துள்ளார். அவர் கூறிவுள்ளதாவது, இம்பேக்ட் ப்ளேயர் விதியால் ஒவ்வொரு பந்தும் 4,6க்கு செல்லும் என நினைக்கும் அளவுக்கு பவுளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தரமான கிரிக்கெட் போட்டிகள், இப்படி ஒரு சார்பாக இருக்கக் கூடாது. எல்லா அணியிலும் பும்ரா, ரஷீத் கான் போன்ற பவுலர்கள் இல்லை. இந்த விதி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்று ஜெய்ஷா கூறிவுள்ளார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று கூறிவுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Impact player rule Virat Kohli criticized


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->