டாஸ் வென்ற கேப்டன் விராட்.! அந்த வரலாறு மாற்றி எழுதப்படுமா? பாக்சிங் டே மேட்ச்.! - Seithipunal
Seithipunal


தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கியுள்ளது. 

இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் களமிறங்கி பேட்டிங்கை செய்ய முடிவு செய்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் இல்லை என்பதால் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது 

இந்திய அணி கடைசியாக 2017-18 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 

அதில், முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று, 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது .

அதன் பிறகு இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் அசத்தி வருகிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்திய மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND v SA Boxing Day Test Match


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->