இந்திய அணியின் துணை கேப்டனாக பந்துவீச்சாளர்.! கேப்டன் ஆகிய அதிரடி மன்னன்.! - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கொண்டு இருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் முடிந்ததும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய - தென் ஆப்பிரிக்கா அணிகள் மொத உள்ளன. இதில், இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், ரோகித் சர்மாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் போட்டியில் பங்கேற்க முடியாத காரணத்தினால், ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக பும்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி விவரம்: 

கே.எல்.ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், 
ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், 
ஷ்ரேயாஸ் அய்யர், வெங்கடேஷ் அய்யர், 
ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 
சாஹல், அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், 
ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், 
தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ind v sa oneday vice caption


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->