#BREAKING || இந்திய அணிக்கு பதிலடி கொடுத்து., தென்ஆப்பிரிக்க அசத்தல் வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. 

இதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி கடந்த மூன்றாம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதனையடுத்து களமிறங்கிய தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்க்சில் 229 ரன்களை சேர்த்து, இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலை பெற்றது.

இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல் 8 ரன்களுக்கும், மயங்க் அகர்வால் 23 ரன்களில் ஆட்டமிழந்தனர். சட்டீஸ்வர் புஜாரா 53 ரன்களும், ரஹானே 58 ரன்களும், விஹாரி 40 ரன்களும் சேர்த்து தங்களது விக்கெட்டை பறிகொடுக்க, இறுதியில் இந்திய அணி 266 ரங்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது.

இன்றைய நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக காலதாமத்துடன் தொடங்கிய நிலையில், சற்றுமுன் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND v SA Second Test SA WON


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->