இந்தியா-ஆஸ்திரேலியா 2வது ஒருநாள் போட்டி.. இந்தியா பேட்டிங்.. அணியில் 2 மாற்றங்கள்.!
IND vs AUS 2nd ODI match Australia won the toss choose Bowl
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்மித் பௌலிங் தேர்வு செய்துள்ளார்.
அணியில் மாற்றம்
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ரோஹித் சர்மா இன்று இஷான் கிஷானுக்கு பதிலாக களமிறங்குகிறார். அதேபோல், ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அக்சர் படேல் விளையாடுகிறார்.
அதேபோல், ஆஸ்திரேலியா அணியில் மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் இங்கிலிஷ்க்கு பதிலாக நாதன் எல்லீஸ் மற்றும் அலெக்ஸ் கேரி விளையாடுகின்றனர்.
மழைக்கு வாய்ப்பு
அந்த வகையில் விசாகப்பட்டினத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக இந்த போட்டி மழையால் தடைபட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால், தற்போது அங்கு வறண்ட வானிலை நிலவுவதால் மழை பெய்வதற்கு சற்று வாய்ப்பு குறைந்துள்ளது. அதன் காரணமாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அணி விவரம்
இந்திய அணி 11 வீரர்கள்
ஷுப்மான் கில், ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல் (வி.கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா அணி 11 வீரர்கள்
டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (கே), மார்னஸ் லாபுசக்னே, அலெக்ஸ் கேரி (வி.கீ.), கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லீஸ், ஆடம் ஜாம்பா.
English Summary
IND vs AUS 2nd ODI match Australia won the toss choose Bowl