சென்னையில் நாளை இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி.. ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில், முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றது.

 இதன் மூலம் 3 போட்டிகள் ஒருநாள் தொடரில் 2 போட்டிகளின் முடிவில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனையடுத்து தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தர உள்ளனர். இதனையடுத்து சென்னை மெட்ரோ ரயில் அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை இலவச சிற்றுந்து சேவை வசதி நாளை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS 3rd ODI in Chepauk stadium special mini Bus for fans


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->