அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அனைத்து வகையான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  

தமிழகத்தைச் சேர்ந்த 38 வயதான அஸ்வின் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், 11 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார்.  

டெஸ்ட் போட்டிகளில் 106 ஆட்டங்களில் விளையாடி 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள அஸ்வின், இதுவரை 6 சதங்கள் உள்பட 3,506 ரன்கள் குவித்துள்ளார். 

குறிப்பாக, வங்கதேசத்துக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் 80 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை சதம் அடித்து காப்பாற்றினார்.

ஆல்-ரவுண்டர் என்கிற பெருமை பெற்ற அஸ்வின், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IND vs AUS Ravichandran Ashwin Retirement Announce


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->