கூலிப்படையை நம்பியிருக்கும் ரஷ்யா..உக்ரைன் அதிபர் பகீர் குற்றச்சாட்டு!
Russia relies on mercenaries Ukrainian President Accusations
ரஷ்யா வெளிநாட்டு கூலிப்படையை நம்பியிருக்கிறது. இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும். போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.மேலும் போரில் இறந்த வட கொரியா வீரர்களின் முகத்தை ரஷ்யா எரிக்கிறது என வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் ஜெலன்ஸ்கி பகிர்ந்துள்ளார்.
போரில் தாக்குதல் நடத்த வட கொரியா படைகளை ரஷ்யா பயன்படுத்துகிறது. அடையாளம் தெரியாமல் இருக்க இறந்த வீரர்களின் முகத்தை எரிக்கின்றனர் ' என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன்- ரஷ்யாவுக்கு இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போர் நடந்து வருகிறது. இந்த சூழலில், ரஷ்யா வெளிநாட்டு கூலிப்படையை நம்பியிருக்கிறது. இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும். போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். போரில் இறந்த வட கொரியா வீரர்களின் முகத்தை ரஷ்யா எரிக்கிறது என வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் ஜெலன்ஸ்கி பகிர்ந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பல வருடப் போருக்குப் பிறகும், ரஷ்யர்கள் இன்னும் மோசமானவர்களாக உள்ளனர். ரஷ்யா வட கொரியப் படைகளை உக்ரைன் மக்களை தாக்குவதற்கு அனுப்புவது மட்டுமல்லாமல், இந்த மக்களின் இழப்புகளை மறைக்கவும் முயற்சிக்கிறது. வட கொரியா வீரர்களை போரில் தாக்குவதற்கு அனுப்புவதை மறைக்க முயன்றனர். பயிற்சியின் போது அவர்களின் முகத்தைக் காட்ட தடை விதிக்கப்பட்டது. அவர்கள் ஆதாரத்தையும் அழிக்க முயன்றனர்.
இப்போது, எங்கள் வீரர்களுடனான போரில், கொல்லப்பட்ட வட கொரிய வீரர்களின் முகங்களை ரஷ்யர்கள் எரிக்கின்றனர். இது அவமரியாதை. வட கொரியர்கள் புடினுக்காக சண்டையிட்டு மடிவதற்கு ஒரு காரணமும் இல்லை. வெளிநாட்டு கூலிப்படையை ரஷ்யா நம்பி இருக்கிறது. இந்த முட்டாள்தனம் நிறுத்தப்பட வேண்டும். இந்த மோசமான செயலுக்கு, பதிலாக ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
English Summary
Russia relies on mercenaries Ukrainian President Accusations