இந்தியா - நியூசிலாந்து 3வது ஒருநாள் போட்டி.. இந்தியா பேட்டிங்.. முதலிடத்திற்கு முன்னேறபோது யார்?
IND vs NZ 3rd ODI newzealand won the toss choose to bowl
இந்திய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு இந்தூரில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் இந்திய அணியில் முகமது சிராஜ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக யுஸ்வேந்திரா சஹால் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடுகின்றனர்.
இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, தற்போதைய ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 113 புள்ளிகளுடன் இங்கிலாந்து முதலிடத்திலும், நியூசிலாந்து 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்திற்கு முன்னேற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
IND vs NZ 3rd ODI newzealand won the toss choose to bowl