டி20 தொடரை கைப்பற்ற போவது யார்? .. இந்திய அணி பேட்டிங்.. அணியில் முக்கிய மாற்றம்.!
IND vs NZ 3rd T20 india won the toss choose to bat
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், 2வது டி20 போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளதால் 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
அதன்படி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் விளையாடிய சஹாலுக்கு பதிலாக உம்ரான் மாலிக் விளையாடுகிறார்.
அணி விவரம்
நியூசிலாந்து அணி 11 வீரர்கள் :
ஃபின் ஆலன், டெவோன் கான்வே(w), மார்க் சாப்மேன், க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னர்(c), இஷ் சோதி, லாக்கி பெர்குசன், பென் லிஸ்டர், பிளேயர் டிக்னர்
இந்திய அணி 11 வீரர்கள் :
சுப்மான் கில், இஷான் கிஷான்(w), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சிவம் மாவி, குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்
இந்திய அணி கடந்த 2019 மார்ச் மாதம் நடந்த தொடருக்கு பின் சொந்த மண்ணில் விளையாடிய ஒரு தொடரை தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாக டி20 தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
IND vs NZ 3rd T20 india won the toss choose to bat