டி20 தொடரை கைப்பற்ற போவது யார்? இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை.!
IND vs NZ 3rd T20 match today
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, இந்திய அணிக்கு எதிராக 3 ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற ஒரு நாள் தொடரில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
![](https://img.seithipunal.com/media/IMG_20230201_075253-7w2rv.jpg)
இதில் முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும், 2வது டி20 போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளதால் 1-1 என்ற கணக்கில் டி20 தொடர் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
அதன்படி, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
![](https://img.seithipunal.com/media/IMG_20230201_075236-7w2rv.jpg)
இந்திய அணி கடந்த 2019 மார்ச் மாதம் நடந்த தொடருக்கு பின் சொந்த மண்ணில் விளையாடிய ஒரு தொடரை தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் காரணமாக டி20 தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
IND vs NZ 3rd T20 match today