வாழ்வா? சாவா? போட்டியில் இந்திய அணி.. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு.!
IND vs SA 2nd ODI South Africa choose to bat
இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்று கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் இன்று மதியம் 1.30 மணிக்கு இந்தியா-தென்னாபிரிக்கா மோதும் 2வது ஒருநாள் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும். அதனால் இந்திய அணி இன்றைய போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டியுள்ளதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணியில் ரிதுராஜ் மற்றும் ரவி பிஷ்னோய் வெளியேற்றப்பட்டு வாஷிங்டன் சுந்தர் மற்றும் சபாஷ் அகமது களமிறங்குகின்றனர். இதில் சபாஷ் அகமது அறிமுகப் போட்டியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் பவுமா மற்றும் சாம்சி வெளியேற்றப்பட்டு ரீசா ஹென்ட்ரிக்ஸ் மற்றும் பிஜோர்ன் ஃபோர்டுயின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி விவரம்
இந்திய அணி 11 வீரர்கள் ;
ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், ஷபாஷ் அகமது, குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ்
தென் ஆப்ரிக்கா அணி 11 வீரர்கள் ;
ஜனேமன் மாலன், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீசா ஹென்ட்ரிக்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ் (கே) பிஜோர்ன் ஃபோர்டுயின், ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே.
English Summary
IND vs SA 2nd ODI South Africa choose to bat