20 வருடங்களாக நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தவே இல்லையா? உண்மை என்ன தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


கடந்த 20 வருடங்களாக நியூசிலாந்து கிரிக்கெட் அணியை இந்திய அணி ஒரு நாள் உலக கோப்பை போட்டிகளில் வீழ்த்தவே இல்லை  என்ற செய்தி ஆனது வேகமாக பரவி வருகிறது. இது இந்தியர்களின் நம்பிக்கையை குறைக்கும் விதமாகவும் இருக்கிறது. 

கடந்த 2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில், சவுரவ கங்குலி தலைமையிலான இந்திய அணி, ஸ்டிபன் பிளமிங் தலைமையிலான நியூசிலாந்து அணியை வீழ்த்தியிருந்தது. 

அதன் பிறகு 2007 2011 2015 2019 என 4 உலக கோப்பை விளையாடிவிட்ட நிலையில், இந்திய அணி நியூசிலாந்து அணி வீழ்த்தியதே இல்லை என்பது உண்மைதான். ஆனால் கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக்கோப்பை லீக் உடன் இந்திய அணி வெளியேறிவிட்டதாலும், கடந்த 2011, 2015 ஆம் ஆண்டு உலககோப்பைகளில் வேறு வேறு குழுவில் இடம் பெற்றதாலும், இந்த இரண்டு அணிகளும் மூன்று உலக கோப்பையில் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பையிலும் லீக் போட்டியில் நியூசிலாந்துடன் ஆட வேண்டிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனை அடுத்து தான் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் போராடி தோல்வியை சந்தித்தது. 

கடந்த 2003 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர், 2019 அரையிறுதி ஆட்டத்தில் மட்டுமே நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதி இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒரே ஒரு ஆட்டம் மட்டுமே அதன் பிறகு நடைபெற்று இருக்கிறது. அதனை மிகப்படுத்தி அனைவரும், 20 வருடங்களாக இந்திய அணி நியூசிலாந்தை வெல்லவில்லை என ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி வருகின்றனர். 

தற்போதைய இந்திய அணி வலுவான அணியாக இருப்பதாலும், இந்தியாவில் விளையாடி வருவதாலும் நிச்சயம் நியூசிலாந்தை வீழ்த்தும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு இருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India and new zealand faced only once in last 20 years in worldcup


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->