17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்தின் சாதனையை சமன் செய்த இந்திய அணி !! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி  சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. வரலாற்று சாதனையாக 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியனாகியுள்ளது. பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி20 உலகக் கோப்பை முதன் முதலில் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கியது. அதில் முதல் உலகக் கோப்பையை இந்தியா வென்று சாதனை படைத்தது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது. இரண்டாவது டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் இலங்கையை வீழ்த்தி வென்றது. 

கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கை அணி இந்தியாவை வீழ்த்தி டி20 உலக கோப்பையை  வென்றது. வெஸ்ட் இண்டீஸ் 2016ல் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்தை வீழ்த்தியது. 

அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2022 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த முறை 2024 இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா இரண்டாவது முறையாக வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து அணிகளுடன் சமன் செய்துள்ளது.

டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது. பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.  
இந்த முறை வெற்றி பெறும் இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலர்கள் பரிசுத் தொகையாக கிடைக்கும், அதாவது இந்திய மதிப்பில் இந்தத் தொகை ரூ.19.95 கோடியாக இருக்கும். இம்முறை அனைத்து அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ள பரிசுத் தொகை 11.25 மில்லியன் டொலர்கள் அதாவது சுமார் 93 கோடி ரூபாயாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India equaled West Indies and England record


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->