#WorldCup2023 || மீண்டும் அணிக்கு திரும்பும் 3 பேர்.!! இந்திய அணியின் உத்தேச பட்டியல் லீக்.!! எகிறும் எதிர்பார்ப்பு.!!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் அடுத்து அயர்லாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை தொடரில் பங்கு பெரும் வீரர்களின் உத்தேச பட்டியலை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் உத்தேச பட்டியல் கசிந்துள்ளது.

அதன்படி காயத்தால் இந்திய அணியில் இருந்து விலகி இருந்த ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரில் நடைபெற்ற உடல் செயல் திறனாய்வில் ஸ்ரேயர்ஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் மூன்றாம் நிலைக்கு தகுதி பெற்றுள்ளனர். அதேபோன்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்மூலம் எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 வீரர்களும் இடம்பெறுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கிடையே ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் உத்தேச பட்டியல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

அதன்படி, ஆசியக் கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் [PTI]: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹுக்மன் கில், விராட் கோஹ்லி, ஸ்ரேயர்ஸ் ஐயர், கே.எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், அக்சர் படேல், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், முகேஷ் குமார், யுஸ்வேந்தர் சாஹல் ஆகியோர் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India proposed World Cup squad list has been leaked


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->