#BigBreakin || மரண அடி வாங்கிய இலங்கை., இந்திய அணி அபார வெற்றி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தழுவியுள்ளது.

இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மொஹாலியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஜடேஜாவின் 175 ரன்கள் என்ற சாதனையுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. 

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணியில் பதும் நிசாங்கா 61 ரன்கள் எடுக்க 174 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

400 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தொடர்ந்து இலங்கை அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இரண்டாவது இன்னிங்சிலும் இலங்கை அணி 178 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து படு தோல்வியை சந்தித்துள்ளது.

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்க்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Sri Lanka Test cricket match result 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->