இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: பகலிரவு ஆட்டமாக நடத்த பிசிசிஐ திட்டம்.! - Seithipunal
Seithipunal


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் கிதிக்கெட் போட்டியை பகலிரவு ஆட்டமாக நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இம்மாதம் 25 ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 18 ஆம் தேதி வரை 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பிப்ரவரி 25ஆம் தேதி முதல் மார்ச் 1ஆம் தேதி வரையும், 2வது டெஸ்ட் மொகாலியில் மார்ச் 5-ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளது.

முதல் டி20 போட்டி மார்ச் 15-ஆம் தேதி மொஹாலியிலும், 2வது டி20 போட்டியை மார்ச் 18ம் தேதி தர்மசாலாவிலும், மூன்றாவது டி20 போட்டிதை லக்னோவிலும் நடத்த திட்டமிட்டு போட்டி அட்டவனை ஏற்கனவே வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் பிபரவரி 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அப்படியே இந்தியா வருவதால், முதலில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தினால் பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்தை திறம்பட கையாள வசதியாக இருக்கும் என பிசிசிஐ கருதுகிறது.

எனவே ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போட்டி அட்டவனையில் மாற்றம் வரும் என தகவல் வெளியாகி உள்ளது. அப்படி மாற்றம் வந்தால் அதன் படி முதலில் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடரும், அதில் முதல் இரண்டு போட்டிகளும் தர்மசாலாவிலும், மூன்றாவது போட்டி இருபது ஓவர் போட்டி மொஹாலியிலும் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து முதல் டெஸ்ட் போட்டியை மொஹலியில் நடத்த முற்பட்டால், பிங்க் பந்தை பயன்படுத்தி விளையாடப்படும் பகல் இரவு ஆட்டத்திற்கு பனிப் பொழிவு அதிகம் உள்ள மொஹாலி மைதானம் சரிவராது என்பதால் முதல் டெஸ்ட் போட்டியை பெங்களூரூவில் பகல் இரவு ஆட்டமாக நடத்த இந்திய கிதிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India Srilanka Pink Ball Day Night Test


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->