தொடரை வெல்லப்போவது யார்.? .. இந்தியா-தென்னாபிரிக்கா 3வது ஒருநாள் போட்டி இன்று மோதல்.! - Seithipunal
Seithipunal


இந்தியா தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் விளையாடிய டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது.

இதனையடுத்து இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இந்திய அணி ;

ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், சபாஷ் அகமது, குல்தீப் யாதவ், அவேஷ் கான், முகமது சிராஜ்

எதிர்பார்க்கப்படும் தென் ஆப்ரிக்கா அணி ;

ஜனேமன் மாலன், குயின்டன் டி காக், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீசா ஹென்ட்ரிக்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகாராஜ் (கே) பிஜோர்ன் ஃபோர்டுயின்/சாம்சி, ககிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs South Africa 3rd ODI today


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->