கோப்பையை வெல்லப் போவது யார்.? இந்தியா -தென் ஆப்பிரிக்கா கடைசி டி20 போட்டி.!
India vs South Africa 5th t20
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
அதன்படி, இதுவரை முடிவடைந்துள்ள 4 டி-20 போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணி யும், அடுத்த இரண்டு போட்டிகளில் இந்திய அணியும் வெற்றி பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கடைசி டி-20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளதால், இத்தொடரைக் கைப்பற்றி கோப்பையை வெல்லும் முனைப்பில் இரு அணியினருமே தீவிரம் காட்டி வருகின்றனர்.
எனவே, இப்போட்டியில் வெற்றி பெற்று டி-20 கோப்பையை கைப்பற்றப்பவது யார்? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும் கோப்பையை கைப்பற்ற இரு அணிகளுமே வரிந்து கட்டுவதால் இன்றைய போட்டியை விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
India vs South Africa 5th t20