#INDvsWI : தொடரை கைப்பற்றுமா இந்தியா.. இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் 2வது டி20 போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வருகிறது.

இதில், மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒயிட் வாஷ் செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு 2வது டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற முனைப்பு காட்டும். அதே அளவில் ஒருநாள் தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி எப்படியாவது டி20 தொடரை கைப்பற்ற போராடும் என்பதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs West Indies 2nd T20 today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->