இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர்.. இன்று கடைசி ஒருநாள் போட்டி.! - Seithipunal
Seithipunal


இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில், முதலில் விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

தொடரை முழுமையாக வெல்வதில் முனைப்பு காட்டும் என்பதால் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றியாவது பெற தீவிரம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் தொடர்ந்து 8 ஒரு நாள் போட்டிகளில் தோற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி அதற்கு முடிவு கட்டும் வேட்கையுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India vs West Indies last oneday international


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->