ஆசிய விளையாட்டு போட்டி! உலக சாதனையுடன் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம்!
India won the first gold in Asian games 2023 at shooting event
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப்பதக்கம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கிடைத்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியா இதுவரை மூன்று வெள்ளி, மூன்று வெண்கலம் மட்டுமே வென்று புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் பின்தங்கி இருந்த நிலையில், தற்போது ஒரு தங்கத்தினை கைப்பற்றி இருப்பதன் மூலம் ஆறாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் டீம் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது. திவ்யான்ஷ் சிங் பன்வார், ருத்ராங்க்ஷ் பாட்டீல் மற்றும் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் ஆடவர்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் டீம் போட்டியில் முதலிடத்தை வென்று, தங்கத்தை கைப்பற்றினார்கள்.
இந்திய அணி 1893.3 என்ற 10 மீ ஏர் ரைபிள் உலக சாதனையை முறியடித்து, புதிய சாதனையாக 1893.7 ஆக அமைத்தது. அணியாக உலக சாதனை ஸ்கோருடன் தங்கப் பதக்கத்திற்கு வந்த, மூன்று இந்திய துப்பாக்கி சுடும் வீரர்களான ருத்ராங்க்ஷ் பாட்டீல் (3வது இடம்), ஐஸ்வரி தோமர் (5வது), திவ்யான்ஷ் பன்வார் (8வது) ஆகியோர் தனிநபர் 10 மீட்டர் ஏர் ரைபிள் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியுள்ளனர்.
இன்று மேலும் சில தங்க பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் கிரிக்கெட் பைனலில் இந்தியா இலங்கை அணிகள் இறுதிப் போட்டியில் மோத இருப்பதால் நிச்சயமாக இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
English Summary
India won the first gold in Asian games 2023 at shooting event