5 ரன்னில் சதத்தை நழுவவிட்ட விராட் கோலி! 20 வருட தாகம் தீர்த்து வென்றது இந்தியா!
India won the match against new Zealand and goes to table topper
உலக கோப்பையில் இன்றைய போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் தர்மசாலா மைதானத்தில் விளையாடின. இந்த போட்டி தொடரில் தோல்வியை பெறாத அணி என்ற பெருமையை இந்தியாவும் நியூசிலாந்தும் தன் வசம் வைத்திருந்த நிலையில், இன்றைய போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தோல்வியை பெறாத அணி என்ற பெருமையை பெற்றதுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும் பெற்றுள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து 273 ரன்களை அடித்தது. அந்த அணியின் மிச்சேல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்தரா 75 ரன்களும் குவித்தனர். முகமது ஷமி 5 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.
கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு விராட் கோலி 95 ரன்கள் ஆட்டம் கைகொடுக்க எளிதில் வெற்றி பெற்றது. ரோஹித் 46 , ஸ்ரேயாஸ் 33, ஜடேஜா 39* , ராகுல் 27 , கில் 26 ரன்கள் அடித்து கைகொடுத்தனர். இந்தியா 274 ரன்களை 6 விக்கெட் இழந்து எடுத்தனர். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
English Summary
India won the match against new Zealand and goes to table topper