டாஸ் வென்ற இந்தியா, அறிமுக வீரராக களமிறங்கிய இந்திய வீரர்! புறக்கணிக்கப்பட்ட சஞ்சு சாம்சன்!
india won the toss and elected bowl
வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஆனது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இன்று தொடங்குகிறது.
பார்போடாசில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வதாக அறிவித்திருக்கிறார். இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் காயத்தில் அவதிப்பட்டு வரும் நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதன்படி அணியில் முகேஷ் குமார் இடம்பெற்றிருக்கிறார். அவருடன் வேகப்பந்துவீச்சாளர்களாக ஷர்தூள் தாக்கூர், உம்ரான் மாலிக் இணைய, சுழற் பந்து பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் இணைந்துள்ளனர். இவர்களுடன் ஆல் ரவுண்டாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவும் பந்துவீச்சு தேர்வாக இருக்கிறார். விக்கெட் கீப்பராக இடம் பெறுவது யார் என்ற கேவிக்கு, சஞ்சீவ் சாம்சனை முந்தி தனது இடத்தை உறுதி செய்து கொண்டிருக்கிறார் இஷான் கிஷன்.
மிடில் ஆர்டரில் எதிர்பார்த்தது போலவே சூரியகுமார் யாதவ் தனது இடத்தை பெற்றிருக்கிறார். தொடக்காட்டக்காரர்களாக ரோகித் சர்மா ஷுப்மான் கில் இடம் பெற்றிருக்கிறார்கள். மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பைக்கு தகுதி பெறாத நிலையில், தற்போது இளம் வீரர்களை வைத்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளித்திருக்கிறது.
இரண்டு அணிகளுக்கும் முக்கியத்துவம் இல்லாத போட்டியாக இருந்தாலும், உலக கோப்பைக்கு பயிற்சிபெரும் விதமாக இந்திய அணியும், உறுதியான அணியை உருவாக்கும் முயற்சியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மல்லு கட்டுவதால் இந்த போட்டி ரசிகர்களுக்கு உற்சாகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
வெஸ்ட் இண்டீஸ் (பிளேயிங் லெவன்): ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், பிராண்டன் கிங், அலிக் அதானாஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், யானிக் கரியா, டொமினிக் டிரேக்ஸ், ஜெய்டன் சீல்ஸ், குடகேஷ் மோட்டி
இந்தியா : ரோஹித் சர்மா , ஷுப்மான் கில், விராட் கோலி, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்
English Summary
india won the toss and elected bowl