டாஸ் வென்றது இந்தியா! ஷர்துல் தாக்கூர் நீக்கம்! அணிக்கு திரும்பினார் சூர்யா! - Seithipunal
Seithipunal


உலக கோப்பையில் இன்றைய போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் தர்மசாலா மைதானத்தில் விளையாட இருக்கின்றன. கடந்த 2003 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்றிருந்தது. 

அதன் பிறகு மூன்று உலக கோப்பை போட்டிகளில் சந்திக்காத இந்த இரண்டு அணிகளும், கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் அரையிறுதிப்பட்டியில் சந்தித்ததில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது. 

இந்த நிலையில் இந்த உலகக் கோப்பையில் இன்று இந்திய அணி நியூசிலாந்தை சந்திக்கிறது. மேலும் இந்த போட்டி தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் தோல்வியை பெறாத அணி என்ற பெருமையை இந்தியாவும் நியூசிலாந்தும் தலா 4 வெற்றிகளை பெற்று தன் வசம் வைத்திருக்கிறது. 

இந்த இரு அணிகளும் இன்று மோதுவதால், இன்றைய போட்டியில் ஏதேனும் ஒரு அணி தோல்வியை சந்தித்தே ஆகவேண்டும் என்பதாலும், தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை யார் தக்க வைப்பார் என்பது இன்றைய போட்டியில் தெரியவரும். 

இந்த போட்டியானது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  மேலும் இவ்விரண்டு பலமான அணிகளுக்கும் இடையே கடுமையான சவால் நிறைந்த போட்டியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்டிக் பாண்டியா விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவும், முஹம்மது ஷமியும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். 

இந்தியா : ரோஹித் சர்மா, ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ்

நியூசிலாந்து : டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரென்ட் போல்ட்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the toss and elected field against new Zealand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->