#U19T20WorldCup:: இங்கிலாந்தை வீழ்த்தி முதல் உலகக் கோப்பையை கைப்பற்றி இந்திய அணி சாதனை...!! - Seithipunal
Seithipunal


மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோர் டி20 உலக கோப்பை முதன் முறையாக இந்த ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்த ஆட்டம் இருந்தனர்.

அதிகபட்சமாக இங்கிலாந்து அணியில் ரயானா 19 ரன்கள் மட்டுமே எடுத்தார். அலெக்சா, சோஃபியா ஆகியோர் தலா 11 ரன்களும், மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கும் ஆட்டம் இழந்த நிலையில் இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய பார்ஷவி, டைட்டஸ், அர்ச்சனா தேவி ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து 69 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14 வது ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் முதன்முறையாக நடத்தப்பட்ட மகளிருக்கான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India won the women U19 T20 WorldCup


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->