பல சாதனைகளை படைத்த ரோகித் சர்மா, முறியடிக்கப்பட்ட பாபர் ஆசாமின் சாதனை !!
indian captain rohit sharma breaks many records
டி20யின் சூப்பர் 8-ல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மோதலில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பல சாதனைகளை செய்துள்ளார். ரோஹித் சர்மா, பாபர் ஆசாமின் சாதனையை முறியடித்தார். டி20 உலக கோப்பையில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து நேரடியாக முதல் இடத்தை ரோஹித் சர்மா பிடித்தார்.
மேலும் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி பாபர் ஆசாமின் ரன்களை விட 42 ரன்கள் பின்தங்கியிருந்தார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம் பெற்றார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ரோஹித் சர்மாவின் அதிரடியான ஆட்டத்தில் இந்த சாதனையை படைத்தார்.
டி20யில் வேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார். ரோஹித் சர்மா 19 பந்துகளில் அரைசதம் விளாசினார். செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், ரோகித் சர்மா 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும்.
மேலும் டி20 உலக கோப்பை போட்டியில் 200 சிக்சர்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கேப்டன் ரோகித் சர்மா படைத்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 சிக்ஸர்கள் அடித்து 200 சிக்ஸர்கள் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.
முதலில் பாபர் அசாம் இந்தப் பட்டியலில் முதலிடத்தை பிடித்து இருந்தார். இதன் பிறகு இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி 42 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இடத்தில் இருந்து சாதனையை முறியடிக்கும் உத்வேகத்தில் செயல்ப்பட்டார். இந்த சாதனையை இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா அதிரடியாக விளையாடி மூன்றாவது இடத்தில் இருந்து நேரடியாக முதலிடத்தை பிடித்தார்.
தற்போது ரோஹித் சர்மா டி20 போட்டியில் அதிக ரன் குவித்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 157 போட்டிகளில் 4165 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆனால் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டி20 போட்டியில் 4145 ரன்களுடன் பாபர் அசாம் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் 123 போட்டிகளில் 129.08 ஸ்ட்ரைக் ரேட்டில் இந்த ரன்களை எடுத்துள்ளார்.
English Summary
indian captain rohit sharma breaks many records