#INDvsNZ :: நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்த அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடும் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் வரும் ஜன.18ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஜன.21ம் தேதி ராய்ப்பூரில் 2வது ஒருநாள் போட்டியும், இந்தூரில் ஜன.24ம் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ராஞ்சியில் ஜன.27ம் தேதியும், லக்னோவில் ஜன.29ம் தேதியும், அகமதாபாத்தில் பிப்.1ம் தேதி முறையே நடைபெற உள்ளது.

நியூசிலாந்தில் நடைபெற்ற ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான போட்டிகளில் மூத்த வீரர்கள் இடம்பெறாத நிலையில் இந்தியாவில் நடைபெறும் தொடரில் மூத்த வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ராஞ்சி டிராபி போட்டியில் 300 ரன் அடுத்த பிரதிவ் ஷா டி20 அணியில் இடம் பெற்றுள்ளார். அதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் கே.எஸ் பரத் விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டிக்கான அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தொடர்கிறார். அதேபோன்று காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து வெளியேறிய சஞ்சு சாம்சனுக்கு பதிலாக அழைக்கப்பட்ட ஜிதேஷ் சர்மா டி20 அணியில் தொடர்கிறார். அதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் ஷாபாஸ் அகமது ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் இந்திய அணி:

ரோகித் சர்மா (C), சுமன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், கே.எஸ் பரத் (WK), ஹார்திக் பாண்டியா (WC), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யூஸ்வேந்திர சாஹல் குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 இந்திய அணி:

ஹர்திக் பாண்டியா(C), சூரியகுமார் யாதவ்(WC), இஷான் கிஷன்(WK), ருத்ராஜ் கெய்க்வாட், சுமன் கில், தீபக் ஹூடா, ராகுல் திருப்பதி, ஜிதேஷ் ஷர்மா(WK), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதிப் சிங், உமர் மாலிக், சிவம் மாவி, பிருதிவ் ஷா, முகேஷ் குமார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian cricket team announced against New Zealand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->