#ASIACUP : இன்று இந்தியா -பாகிஸ்தான் மோதல்.. இந்திய அணிக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியிட்ட பிசிசிஐ.! - Seithipunal
Seithipunal


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அவர் தனிமைப்படுத்திக்கொண்டார். அதேவேளை, ஆசிய கோப்பையில் பங்கேற்க இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வந்தது. 

இதனையடுத்து இந்திய அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்பட்டு வந்தார். ஆசிய கோப்பை டி20 தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியான இந்தியா - பாகிஸ்தான் இடையான போட்டி இன்று நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார். அவர், ஆசிய கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணியுடன் இணைந்துள்ளார். டிராவிட் துபாய் சென்றடைத்துவிட்டதாகவும், அவர் பயிற்சி பணிகளை மேற்கொள்வார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் திரும்பியுள்ளது வீரர்கள் இடையே புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian head coach Rahul Dravid join to indian team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->