உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் அபாரம்!  - Seithipunal
Seithipunal


உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன் - துருவ் ஜோடி 21-17, 21-16 என்ற கணக்கில் கிம்-ஆண்டர்ஸ் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் 

அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா இணை, போட்டித் தொடரில் எட்டாம் நிலை வகிக்கும் இணையான கிம் அஸ்ட்ரப் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்கரூப் இணையை வீழ்த்தியுள்ளனர். 

இந்தியர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி, தங்கள் நிலையை உயர்த்திக் கொண்டனர். கிம் அஸ்ட்ரப் மற்றும் ஆண்டர்ஸ் ஸ்கரூப் இணை 2021 ஆம் ஆண்டு போட்டி தொடரில் வெண்கல பதக்கம் வென்ற ஜோடி என்பது குறிப்பிடத்க்கது. 

முன்னதாக பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடியும்,  பூஜா தண்டு - சஞ்சனா சந்தோஷ் ஜோடியும் ஆகியோர் முறையே முதல் நிலை மற்றும் மூன்றாம் நிலை வீராங்கனைகளுக்கு எதிராக தோல்வியுற்று வெளியேறினர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian pair arjun - dhruv have defeated the 2021 bronze medalists in BWF World Championships


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->