உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில் சாம்பியன் ஆனார் இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி..! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் நடந்த உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இவர் இந்தோனேஷியா வீராங்கனை  ஐரீன் சுகந்தரை வீழ்த்தி இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதில்  ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு களம் இறங்கிய, கொனேரு ஹம்பி, 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார். 

சாம்பியன் பட்டம் வென்ற,இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் செஸ் போட்டியில் சாதனை படைத்த ஜூடித் போல்கர், சூசன் போல்கர், ஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா என பலரம் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

கொனேரு ஹம்பி ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். இவருக்கு 37 வயதாகிறது. கொனேரு ஹம்பி செஸ் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 

மற்றும் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

அந்தவகையில், கடந்த 2012 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ராபிட் செஸ் உலக தொடரில் கொனேரு ஹம்பி வெண்கல பதக்கம் வென்றார்.

2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian player Koneru Humpy became the champion in the World Womens Rapid Chess Championship


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->