இரண்டாவது வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை பிரீத்தி! ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து! - Seithipunal
Seithipunal


பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி  நடந்து வருகிறது. இதில்  இந்திய வீராங்கனை பிரீத்தி பால் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக பிரீத்தி பால் பெண்களுக்கான 100 மீட்டர் டி35 போட்டியிலும் வெண்கலம் வென்றிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, பாரா ஒலிம்பிக்கில் 2வது வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்திக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், "பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் மகளிர் 200 மீ - டி35 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரீத்தி பாலுக்கு வாழ்த்துகள். 100 மீட்டர் வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, பாரா ஒலிம்பிக்கில் அவர் வென்ற 2வது பதக்கம் இதுவாகும், இது ஒரு விதிவிலக்கான சாதனையாகும்.

2 பாரா தடகளப் பதக்கங்களையும் இந்தியாவுக்கான அவர் வென்றுள்ளார். அவரை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது. மூவர்ணக் கொடி போர்த்தி அவர் எடுத்த புகைப்படங்கள் விளையாட்டு பிரியர்களை மின்னச் செய்தன.  விளையாட்டு கலாச்சாரத்தை இளைஞர்களிடையே வலுப்படுத்தி, இந்தியாவுக்காக அதிக பாராட்டுகளை வெல்வார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், "பாரா ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 200 மீ டி35 போட்டியில் வெண்கலம் வென்று, ஒரே தொடரில் இரண்டாவது பதக்கம் பெற்று, பிரீத்தி பால் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்திய மக்களுக்கு அவர் ஒரு உத்வேகம். அவருடைய அர்ப்பணிப்பு உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian player Preity won the second bronze Greetings from President Draupadi Murmu and Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->