ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்த இந்திய அணி.. என்ன தெரியுமா?
Indian record of most runs in oneday international
இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில், முதலில் நடைபெற்ற டி20 தொடரில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு திருவனந்தபுரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 390 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 110 பந்துகளில் (13 பவுண்டரி, 8 சிக்ஸர்) 166 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 391 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 22 ஓவர்களில் 73 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதனையடுத்து 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 4 விக்கெட்களும், முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். மேலும், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் (317 ரன்கள்) வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்பு அயர்லாந்து அணிக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது.
English Summary
Indian record of most runs in oneday international