உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:: விராட் கோலி நாளை இங்கிலாந்து பயணம்..!! உடன் செல்லும் சக வீரர்கள்..!! - Seithipunal
Seithipunal


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி வரும் ஜூன் 7ம் தேதி இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகரிலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்தியாவில் தற்பொழுது ஐபிஎல் தொடர் நடைபெற்ற வருவதால் இந்திய அணி இங்கிலாந்து செல்லாமல் உள்ளது.

தற்பொழுது ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை, குஜராத், லக்னோ மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதனால் மற்ற அணி வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன் தொடர்கான அணியில் பங்கேற்க நாளை இங்கிலாந்து செல்ல உள்ளனர். 

மற்ற வீரர்கள் வரும் மே 29ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளனர். நாளை செல்லும் முதற்கட்ட இந்திய அணியில் விராட் கோலி, ஷர்துல் தாகூர், அக்ஷர் பட்டேல், முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், உமேஷ் யாதவ் மற்றும் உனத் கட் ஆகியோர் செல்ல உள்ளனர். இவர்களுடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அனிகட் சௌத்ரி, ஆகாஷ் தீப், மற்றும் பிரித்திவிராஜ் ஆகியோர் இந்திய அணியின் வலை பயிற்சி பந்துவீச்சாளர்களாக செல்ல உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian team travel to England for the first round to participate in the WTC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->