INDvsNZ : அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்! அடுத்தடுத்து 2 டக்-அவுட்! - Seithipunal
Seithipunal


இந்தியா - நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதியற்சி கொடுத்துள்ளனர்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்கார்களாக ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா களமிறங்கினர்.

இதில், ரோஹித் சர்மா 2 ரங்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

கில்லுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள சர்ஃபராஸ் கான் தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று பார்த்தால் அவரும் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போதுவரை இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 13 ரன்கள் எடுத்து உள்ளது. களத்தில் ஜெய்ஸ்வால் 8 ரன்களுடனும், ரிஷப் பந்த் 3 ரன்களுடனும் உள்ளனர்.

மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடாமலேயே கைவிடப்பட்ட நிலையில், இன்று 2-ஆவது நாள் ஆட்டத்தில் முதல் இரு செஷன்களில் கூடுதலாக 15 நிமிஷங்கள் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

INDvsNZ test match 2024


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->