#IPL2022 : ஐபிஎல் தொடரில் புதிய மாற்றங்கள்..2 குரூப்களாக அணிகள் பிரிப்பு.!
IPL 2022 group stage method Change
15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன.
10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா நோய்த்தொற்று காரணமாக, இந்த ஐபிஎல் தொடரை ஒரே இடத்தில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஐந்து மைதானங்களில் இந்த ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம், பிரபோர்ன் மைதானம், நவி மும்பையில் உள்ள ரிலையன்ஸ் ஸ்டேடியம், புனேயில் உள்ள மைதானம் உள்ளிட்ட ஐந்து மைதானங்களில் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் 2022 15-வது சீசனின் முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடங்குகிறது என ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படெல் அறிவித்துள்ளார். இந்த போட்டிக்கான அட்டவணை விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்த முறை ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Group A-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும், Group B-யில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு குரூப்பில் இருக்கும் ஒவ்வொரு அணியும், எதிர் குரூப்பில் உள்ள 5 அணிகளுடன் இரண்டு முறை விளையாடும். அதேபோல், அதே குரூப்பில் உள்ள மீதமுள்ள 4 அணிகளுடன் ஒரு முறை விளையாடும். அதில் 2 ஹோம் மேட்ச்கள், 2 வெளியூரில் விளையாடும்.
ஐபிஎல் சாம்பியன்ஷிப் வெற்றிகளின் எண்ணிக்கை மற்றும் அந்தந்த அணிகள் விளையாடிய இறுதிப் போட்டிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே போட்டிகளை நடத்த பிசிசிஐ நிர்வாகம் உறுதியாக உள்ளது. மேலும், ஐபிஎல் போட்டிகளை 40% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், கொரோனாவின் பரவல் குறையும் பட்சத்தில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
English Summary
IPL 2022 group stage method Change