சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74  போட்டிகள் நடைபெற உள்ளது.

இதில், மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. 

இதனையடுத்து நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. அதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 முதல் தொடங்குகிறது.

அதன்படி, ஆன்லைன் மற்றும் நேரடி இந்த டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 2 டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தின் வழியே டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி, டிக்கெட் விலை ரூ.1500 முதல் ரூ.3000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 Chepauk stadium matches ticket from today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->