ஒரே ஒரு சிக்ஸர் அடிச்சு இருந்தா போதுமே! ஏமாற்றத்துடன் கில்! அடித்து துவம்சம் செய்த சாஹா!
IPL 2023 GT VS LSG MATCH Shubman Gill misses out his well deserved century against Lucknow Supergiants
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஆடி வருகின்றன.
டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதில் விரித்திமான் சகா பந்துகளை நான்கு பக்கமும் சுழற்றி, சுழற்றி அடித்தார். மறுபக்கம் ஷுப்மன் கில்லும் லக்னோ அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்.
இருவரும் சேர்ந்து 142 ரன்கள் சேர்த்த நிலையில், விருத்திமான் சாக 43 பந்துகளில், நான்கு சிக்ஸர், 10 பவுண்டரி உட்பட 86 ரன்கள் சேர்த்து தனது ஆட்டம் இருந்தார்.
தொடர்ந்து குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 14 பந்துகளை சந்தித்து 25 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக ஷுப்மன் கில் 94 ரன்னுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். 51 பந்துகளில் 7 சிக்ஸர், 4 பவுண்டரி அடித்த ஷுப்மன் கில்லுக்கு ஒரு சிக்ஸர் அடித்திருந்தால் 100 ரன்களை எட்டியிருக்க முடியும். ஆனால் அதற்க்கு வாய்ப்பு சரியாக அமையவில்லை.
இறுதியில் குஜராத் அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 227 ரன்களை சேர்ந்தது. 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி தற்போதுவரை, 6ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் எடுத்துள்ளது.
English Summary
IPL 2023 GT VS LSG MATCH Shubman Gill misses out his well deserved century against Lucknow Supergiants