ஐபிஎல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலம் எங்கு? எப்போது.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த மூன்று சீசன்களாக ரசிகர்கள் அனுமதிக்கப்படாமல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இதில், கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் இந்தியாவில் நடந்தாலும் 4 மைதானங்களில் மட்டுமே நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2023 mini auction on December 23


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->